இந்தியா எல்லைக்காக பாகிஸ்தானுடன் சண்டையிடும்போது நம் நாட்டிற்கு அத்து மீறும் மீனவர்களை ஏன் தடுக்க முடியாது ?

meenawamilஇந்திய அரசாங்கம் ஏன் பாகிஸ்தானுடன் பாகிஸ்தான் எல்லையில் சண்டை போடுகின்றார்கள். அவ்வாறு சண்டை போடுவதற்கு என்ன காரணம் என யாழ். மாவட்ட மீன்பிடி கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய இழுவைப்படகினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஆய்வுகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இந்திய மீனவர்களின் இழுவைப்படகினை கட்டுப்படுத்துவற்கு அரசியல் வாதிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். இது குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் கலந்துரையாடியுள்ளனரா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்கள்.

அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், இறையாண்மையினை முன்வைத்து பாகிஸ்தானுடன் சண்டை போட முடியும். எமது நாட்டிற்குள் அந்நியன் வந்து ஆட்சி செய்யக்கூடாது எமது மக்களை காப்பாற்ற வேண்டும் என்று போராடுவது உண்மை எனில் எமது நாட்டு கடற்பரப்பிற்குள் வந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை ஏன் நிறுத்த முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், அந்த நாட்டு மக்களுக்கு இறையாண்மை இருக்கின்றதெனில், எமக்கும் இறையாண்மை இருக்கின்றது. எமது இறையாண்மையினையும் சட்டத்தினையும் மதித்து நாங்கள் இருக்கின்றோம். ஆனால் எமது நாட்டு பிரதமர் கூறிய வார்த்தைகள் என்ன அதனை கூட ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமரின் வார்த்தையினை நடைமுறைப்படுத்த வேண்டும். அதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். அதேவேளை, எமது தமிழ் அரசியல் வாதிகள் ஒரே ஒருவரை தவிர வேறு எவரும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கை குறித்து யாழ். மாவட்ட மீன்பிடி கூட்டுறவு சங்க தலைவராகிய என்னுடன் இதுவரையில் தொடர்பு கொண்டு, இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடவும் இல்லை. கேட்கவும் இல்லை. ஆனால், ஒரே ஒருவரான முன்னர் புனர்வாழ்வு அமைச்சராகவும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

அதேநேரம், 5 ஆயிரம் பேருடன் கடலில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். ஆனால், தற்போது, அவர் அமைச்சராக வரவில்லை. அவர் இருந்திருந்தால், நிச்சயம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு எட்டியிருக்கும். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோ, வடமாகாண சபை உறுப்பினர்களோ சரி இதுவரையில் இந்திய மீனவர் பிரச்சினை குறித்து தொடர்பு கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அதேநேரம், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடமாகாண சபை ஒன்று அமைந்துள்ளது.

அதன் செயற்பாடுகள் உங்களுக்கு திருப்தியளித்துள்ளதா, ஏன் அதனூடாக நடவடிக்கை மேற்கொள்ள கூடாது, மீனவர்கள் அழிகின்ற நிலைமையில் இருக்கின்றபோது, எவ்வாறு வடமாகாண சபையில் திருப்தி கொள்ள முடியும். வட பகுதியில் மீன் வளங்கள் அழிவது மட்டுமன்றி மீன்வளங்களும் அழிந்து போகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply