இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது ஆயிரத்து தொன்னூறு பேர் பலி
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது ஆயிரத்து தொன்னூறு பேர் பலியாகியுள்ளதாக சவுதி அரசு அறிவித்துள்ளது. மினா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக 1090 புகைப்படங்களை சவுதி அரசு இந்தியா மற்றும் பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பி வைத்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின. இவை அனைத்தும் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் சம்பிரதாயத்தின்போது, கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்பதுபோல் அந்த செய்தி பலராலும் புரிந்துகொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்பாக சவுதி அரசின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மன்சூர் அல் துர்க்கி தற்போது தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
செப்டம்பர் 11-ம் தேதி மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 111 யாத்ரீகர்கள் உயிரிழந்ததாகவும், 24-ம் தேதி மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் சம்பிரதாயத்தின்போது, கூட்டநெரிசலில் சிக்கி 769 யாத்ரீகர்கள் உயிரிழந்ததாகவும், இந்த 880 பேர் போக, மீதிபேர் வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக வந்து சவுதியில் தங்கியிருந்தவர்கள் மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த மக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 210 பேரில் பலர் உடல்நலக்குறைவு மற்றும் இயற்கை மரணங்களால் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply