ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் கைப்பற்றிய நகரத்தில் இஸ்லாமிய சட்டம் அமல்?
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு அங்கு மீண்டும் தலிபான்கள் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. ராணுவத்துக்கு எதிராக அவர்கள் தீவிர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டூஷ் நகரில் கடும் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். ஆனால் அதை மீண்டும் கைப்பற்ற அமெரிக்காவின் குண்டுவீச்சு உதவியுடன் ராணுவம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இதற்கிடையே 2001–ம் ஆண்டுக்கு பிறகு தாங்கள் முதன் முறையாக கைப்பற்றிய குண்டூஷ் நகரில் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்டத்தை அமல்படுத்த போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்த 10 நிமிட வீடியோவை ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில் ‘‘குண்டூஷ் நகர மைதானத்தல் கூடிய தலிபான் தீவிரவாதிகள் தற்போது வெள்ளை கொடிகளுடன் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட டாங்கிகள் மற்றும் குண்டு துளைக்காத கார்கள் மற்றும் துப்பாக்கிகள், வெடி குண்டுகளை காட்டுகின்றனர். தங்கள் வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
மேலும் புதிய தலிபான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முல்லாஅக்தர் மன்சூரின் செய்திகள் வெளியிடப்பட்டன. அதில், ‘‘குண்டூஷ் நகர மக்களின் உயிரும், உடைமைகளும் பாதுகாக்கப்படும். எங்களது வெற்றியை ஆப்கானிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். குண்டூஷ் நகரில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமல்படுத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply