சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது முதன்முதலாக பிரான்ஸ் விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உள்பட இரண்டரை லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிபரின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவில் இருந்து போர்க்கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சிரியா போராளிகளுடன் சேர்ந்து சண்டையிட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த பதினைந்து நாட்களாக அங்கு தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்துவந்த பிரான்ஸ் நாட்டு உளவுத்துறை 3 நாட்களுக்கு முன்பாக தீவிராவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.
இதன்படி கடந்த ஞாயிறு அன்று ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய இடத்தின் மீது நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் 12 பேர் சிறுவர்கள் என்றும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவை சேர்ந்த ராமி அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply