மஹிந்தவுக்கு மீண்டும் அழைப்பு

mahindaமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை பாரிய மோச­டிகள் மற்றும் ஊழல் மோச­டிகள் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விற்கு எதிர்­வரும் 15ஆம் திகதி விசா­ர­ணைக்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ஊடகம் ஒன்றில் மேற்­கொள்­ளப்­பட்ட விளம்­ப­ரங்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வுகள் சம்­பந்­த­மாக விசா­ரணை நடத்­து­வ­தற்கு இவ்­வாறு அழைப்பு விடுக்­கப்­பட்­ டுள்­ளது.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் இல்­லத்­திற்கு சென்ற ஆணைக்­குழு அதி­கா­ரிகள் அவ­ரிடம் விசா­ரணை நடத்­தி­யி­ருந்­தனர். அதன் பின்னர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முன்னாள் செயலர் சுசில் பிரேம்­ஜ­யந்­த­விடம் ஜனா­தி­ப­தியின் ஆணைக்­கு­ழு­வினர் விசா­ரணை நடத்­தினர். அதன் தொடர்ச்­சி­யா­கவே தற்போது மீண்டும் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply