ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் ஒபாமா அறிவிப்பு

ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்து இருக்கிறார். அமைதி பணிகளுக்காக என்று கூறிக்கொண்டு ஈரான் அணு ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அமைதிப்பணிக்காக என்ற பெயரில் அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முற்படுவதாக புஷ் தலைமையிலான அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இதனால் இருதரப்பினரிடையேயும் நம்பிக்கை இன்மை ஏற்பட்டது. அணு ஆராய்ச்சியை கைவிடவேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று புஷ் தலைமையிலான அமெரிக்கா எச்சரித்தது.

இதனால் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கக்கூடும் என்ற எண்ணம் உலக அளவில் ஏற்பட்டது. ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இதற்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என்று கூறிய ஈரான் தொடர்ந்து அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய ஜனாதிபதியான ஒபாமா ஈரானுடன் பேச்சுவார்த்தை ஏற்படுத்துவோம் என்று அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் ஈரான் மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஈரான் புத்தாண்டையொட்டி வெளியிடப்பட்டு உள்ள இந்த வீடியோவில் பார்சி மொழியில் சப்டைட்டிலும் போடப்பட்டு உள்ளது. இதில் அவர் கூறியதாவது.

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான உறவு வைத்துக்கொள்ள கடமைப்பட்டு உள்ளது. இதற்கான நடைமுறையை மிரட்டல்கள் மூலம் முன்கூட்டியே தொடங்க முடியாது. பரஸ்பர மரியாதையோடும் கவுரவத்தோடும் நடத்தப்படவேண்டும்.

புத்தாண்டு தினத்தில் புதிய சகாப்தத்தை தொடங்குவோம். பகைமை நாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் சகோதரத்துடன் இந்த சகாப்தத்தை உருவாக்குவோம்

இவ்வாறு அந்த வீடியோ செய்தியில் ஒபாமா கூறி இருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply