வங்காளதேசத்தில் ஜப்பானியர் படுகொலை: ஐ.எஸ். தீவிரவாதக்குழு பொறுப்பேற்பு
வங்காளதேசத்தில் தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்ட ஜப்பானியரின் மரணத்திற்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு ஏற்றுள்ளது. ஜப்பான் நாட்டினரான ஹோஷி குனியோ(65) என்பவர் வங்கதேசத்தின் ரங்புரா மாவட்டம், கவுனியா நகரில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர் அந்நாட்டு போலீசார்.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு நாங்கள்தான் பொறுப்பு என ஐ.எஸ். தீவிரவாதக்குழுவினர் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இத்தாலிய சமூகச் சேவகரான சீசாரே டவெல்லா(50) என்பவர் கடந்த 28-ம் தேதி மாலை சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply