ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தாவிட்டால் மத்திய கிழக்கு ஆசியா அழிந்துவிடும்: சிரிய அதிபர் அசாத்

asadரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தாவிட்டால் மத்திய கிழக்கு ஆசியா அழிந்துவிடும் என சிரிய அதிபர் அசாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிரிய அதிபர் பஷர் அல்-அசாத் அளித்துள்ள பேட்டியில் “சிரியா, ரஷ்யா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணி வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லையென்றால் மத்திய கிழக்கு ஆசியா அழிவையே சந்திக்கும். இந்த போரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

 

ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் தீவிரமாக ஈடுப்பட்டால், அவர்கள் வேகமாக பரவுவதை தடுப்பதோடு மட்டும் அல்லாமல் அவர்களை வீழ்த்த முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த புதன் கிழமை முதல் ரஷ்யா சிரியாவில்  பல விமானத் தாக்குதல்களை நடத்திவருகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply