வினோநோகராதலிங்கம் எம்.பியின் கருத்துகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளனவாம் : தங்கேஸ்வரி

பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்த கருத்துகள் கட்சிக்குள் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி தெரிவித்தார். இவரின் பாராளுமன்ற உரை குறித்து அடுத்த வாரமளவில் கட்சிக் கூட்டத்தின் கவனத்துக் கொண்டு வரப்படலாமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்கள் அச்சமின்றி நிம்மதியாக இருப்பதாகவும் அங்கு இயங்கும் சதொச விற்பனை நிலையம், பாடசாலைகள், வங்கிகள் என்பன சிறப்பாக இயங்கி வருவதாகவும் அதிகாரிகள் மக்களின் தேவைகளை இனங்கண்டு செய்யற்படுவதாகவும் அவர் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த உரை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியை  இன்று  வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தொடாந்து கருத்துத் தெரிவித்த அவர், எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இதுவரை எவ்வித கருத்து வேறுபாடுகளோ பிரிவினைகளோ ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் இந்த நிலை தொடரவேண்டுமென்பதே அனைவரதும் விருப்பமாகும். அது தொடருமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் அரசாங்கத்துடன் சேரப் போவதாகவும் அமைச்சுப் பதவியைப் பெறப்போவதாகவும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளனவே என்று கேட்போது..

அவர் மனதில் உள்ளதை எம்மால் எப்படிக் கூறமுடியும?;. இவ்வாறான முடிவொன்றுக்கு வருவதற்கு அவர்மீது அழுத்தங்கள் பிரயோகிகக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவர் சார்ந்த கட்சிக்குள் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல) இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாகவும் இவ்வாறானதொரு முடிவுக்கு வந்திருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply