ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்
இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் பிரதமர் நரேந்திர மோடியும், இன்று சந்தித்தனர். ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு தில்லி விமான நிலையத்தில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.ஏஞ்சலா மெர்க்கலுக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து பிரதமர் மோடியைச் ஏஞ்செலா மெர்க்கல் சந்தித்தார். மெர்க்கலை வரவேற்ற மோடியிடம் அவர் இந்தியாவின் வளர்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை ஜெர்மனி வழங்கும் என கூறினார். இந்தியா – ஜெர்மனி இடையே பாதுகாப்பு, கல்வி, மரபுசாரா எரிசக்தி, அறிவியல் தொழில்நுட்பம், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நட்புறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply