போலீசை ஏமாற்றி ஈராக்கில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 57 பேர் பலி
ஈராக்கின் மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல்களில் குறைந்தது 57 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.முதல் தாக்குதல், பாக்தாத்தின் வடகிழக்கில் 80 கி.மீட்டர் தொலைவில் உள்ள காலிஸ் நகரத்தின் சந்தை பகுதியில் நடத்தப்பட்டது. இதில் 35 பேர் பலியானர்கள். அவசரமாக மருந்து வாங்க காரை பார்க் செய்ய வேண்டும் என கூறி, அப்பகுதியில் இருந்த போலீசை ஏமாற்றிவிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே போல் நாட்டின் மற்ற இரண்டு பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல்களில் முறையே 10 மற்றும் 12 பேர் கொல்லப்பட்டதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் முக்கிய பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ். அமைப்பே இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply