ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகர் முழுவதையும் கைப்பற்றிய ராணுவம்

Afghanistan 0f51c4a2ece0_S_secvpfஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான குண்டுசில், கடந்த மாத இறுதியில் நுழைந்த தலீபான்கள், அரசு படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி நகர் முழுவதையும் கைப்பற்றினர். இந்த சண்டையில் முதலில் பின்தங்கியிருந்த ஆப்கன் படைகள், பின்னர் அமெரிக்க படையினரின் உதவியுடன் தலீபான்களுக்கு எதிராக போரிட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான சண்டை நடந்து வந்தது. இதில் கொஞ்சம் கொஞ்சமாக குண்டுஸ் நகர் அரசு படைகள் வசமானது. எனினும் அங்கு தீவிர சண்டை நடந்து வந்தது.

 

இந்த நிலையில் கடந்த 8 நாட்களில் முதல் முறையாக நேற்று அங்கு எந்த சண்டையும் நடைபெறவில்லை எனவும், கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும் குண்டுஸ் நகரவாசிகள் கூறியுள்ளனர். மேலும் நகரின் பெரும்பாலான பகுதிகள் தற்போது அரசு படைகள் வசம் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

 

இது குறித்து அப்துல் கபூர் என்பவர் கூறுகையில், ‘நகரின் மையப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால் நடைபாதைகளில் பிணங்கள் சிதறி கிடப்பதாலும், சாக்கடை கழிவுகளாலும் நகர் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது’ என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply