இலங்கை சர்வதேசத்துடன் செயற்பட ஜப்பான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
இலங்கையில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட ஜப்பான் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை யின் மூலம் இலங்கையின் உள்ளகப் பொறிமுறைக்கு சாதகமான சமிக்ஞை கிட்டியிருக்கும் நிலையில் அதனை சாதகமாக்கிக் கொண்டு சர்வதேசத்தின் முன்செல்வதற்கு ஜப்பானின் உந்துதல்களை முழு அளவில் எதிர்பார்ப்ப தாகவும் ஜப்பான் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜப்பான் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,
இலங்கையின் தேசிய அரசாங்கம் தென்கிழக்காசியாவின் பொருளாதார வளர்ச்சியை நெருங்கி இருப்பதால் இச்சந்தர்ப்பத்தில் எமது நாட்டின் முன்னேற்றப்பாதைக்கு ஜப்பான் கூடுதல் ஒத்துழைப்பை வழங்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
தேசிய நல்லிணக்கத்தையும், சமாதா னத்தையும் கட்டியெழுப்புவதற்காக இலங்கை மேற்கொண்டு வரும் பிரயத் தனத்துக்கு ஜப்பானின் ஒத்துழைப்பை மிக முக்கியமானதொன்றாக எதிர்பார் ப்பதாக இங்கு சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சமூக பொருளாதார நிலையை கட்டியெழுப்பு வதற்காக உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு உதவி மாநாடொன்றை கூட்டுவதற்கு ஜப்பானிய அரசின் ஒத்துழைப்பை தாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த பாராளுமன்ற விசேட உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசினதும் பாராளுமன்றத்தினதும், இலங்கை மக்களதும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை ஜப்பானிய மன்னருக்கும் அந்நாட்டுப் பிரதமர், பாராளுமன்றம், நாட்டு மக்களுக்கும் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய அரசாங்கமானது நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணிப் பாதுகாக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும் எதிர்பார்ப்புக்கும் ஜப்பான் நாடு முதன்மை பெற்ற முதலீட்டாளராக இலங்கை மீதான நேசக்கரத்தை நீட்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
பிரதமர் இங்கு தொடர்ந்து உரை யாற்றுகையில் கூறியதாவது,
ஜப்பானிய அரசும், நாட்டு மக்களும் எனக்கும் எனது துணை வியார் மற்றும் தூதுக்குழுவினருக்கும் அளித்த வரவேற்பு, மற்றும் உபசாரங்கள் என்றும் எமது மனங்களை விட்டுவிலக மாட்டாது. இந்த உபசரிப்புகளால் நாம் பூரித்துப் போயிருக் கின்றோம்.
ஜப்பானிய அரசருக்கும் அரசுக்கும், பிரதமருக்கும், பாராளுமன்றத்துக்கும், ஜப்பானிய நாட்டு மக்களுக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசினதும், பாராளுமன்றத்தினதும் நாட்டு மக்களதும் நல்வாழ்த்துக்களை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க 1952 பெப்ரவரி 29 ஆம் திகதி ஜப்பானுடன் சமதான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் போது பின்வருமாறு தெரிவித்தார்.
“இந்த சமாதான உடன்படிக்கையின் பங்காளியாவதன் மூலம் எம்மால் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஜப்பான் ஒரு நாடாக மீளெழுச்சி பெறுவதற்கும் அதன் நிலையான ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. குரோத மனப்பான்மையை உள்ளங்களில் வைத்து ஜப்பானிய மக்களை மிதித்து அடிமைப்படுத்த ஒருபோதும் நாம் முயற்சிக்க முடியாது. அவ்வாறு செய்யவும் மாட்டோம்”
இந்த அறிவிப்பை வெளியிட்டு 22 நாட்களில் எமது பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க மரணமடைந்தார். அவரது மறைவின் ஒரு மாதத்தின் பின்னர் அவரது கொள்கைப்படி எமது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜ தந்திரக் கதவுகள் திறக்கப்பட்டன.
டி.எஸ். சேனாநாயக்கவின் சிந்தனைக் கமைய அவரது நிதியமைச்சரான ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான விசேட தூதுக்குழு சன்பிரான்சிஸ்கோவில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்கு அனுப்பப்பட்டது.
தான் அரசியல் பிரவேசம் செய்த அந்நாட்களில் ஜே.ஆர். ஜயவர்தன சன்பிரான்சிஸ்கோ செல்லும் வழியில் தங்கி இருந்த இம்பீரியல் ஹோட்டலில் யுத்தத்தினால் அழிவுற்ற ஜப்பானின் நிலைமைகளை கண்டு எமக்கு தெளிவு படுத்தியதை இவ்வேளை நினைவூட்டிப் பார்க்கின்றேன்.
ஜே.ஆர். அன்று சன்பிரான்சிஸ்கோ மாநாட்டில் ஆற்றிய உரையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றளவும் பேசப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இன முரண்பாடும், பயங்கரவாதமும் தலைவிரித்தாடிய போது அன்றைய ஜப்பானிய வெளி விவகார அமைச்சர் அபேயும், பிரதமர் தஸதோவும் வழங்கிய ஒத்துழைப்பு, ஆதரவுகளை ஒருபோதும் எம்மால் மறக்கவியலாது.
குவைத் நாட்டு ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட பொருளாதார நெருக் கடியை சீர்செய்வதற்கு உதவி பெறும் பொருட்டு பிரேமதாஸ அரசின் அமைச் சராக நான் இங்கு வந்த போது ஜப்பான் வழங்கிய உதவிகள், ஆலோ சனைகள் எமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவின.
2001 இல் தான் பிரதமராக இருந்த காலப்பகுதியில் புலிகள் அமைப்புடன் சமாதானப் பேச்சுக்களிலீடுபட்டேன். அக்கால கட்டத்தில் ஜப்பானிய பிரதமராக இருந்த கைசுமி டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டில் ஆலோசனை நடத்திய பின்னர் இலங்கைக்கு வழங்கிய உதவிகள், ஒத்துழைப்புகளை மீள நினைவூட்ட விரும்புகின்றேன்.
ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடான நல்லாட்சி, சட்டத்தின்ஆட்சி, நேர்மைத்தன்மை, நீதித்துறையின் சுயாதீனம், இவை நாட்டின் நல்லாட் சிக்கான அடிப்படைகளாகும்.
2015 அக்டோபர் முதலாம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின் போது இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடு மற்றும் மனித உரிமைகள் பிரேரணை ஊடாக புதிய கொள்கை அடிப்படையில் பிரவேசிக்கும் இலங்கையின் முயற்சி பாராட்டப்பட்டது.
இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து மற்றும் சில அரசியல் சக்திகளுடன் தேசிய அரசை ஏற்படுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் அனைத்துத் தரப்புகளுடன் ஆலோசித்து யோசனைகளைப் பெற்றுக்கொண்டு அமைதியும், சமாதானமும் நிறைந்த அரசியல் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இன்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபரகாம் லிங்கன் சொன்ன கூற்றை நினைவூட்ட விரும்புகின்றேன். “துப்பாக்கி குண்டுகளை விட வாக்குச்சீட்டு பயமானது” வாக்குச்சீட்டின் மூலம் எந்தச் சவாலையும் வெற்றி கொள்ள முடியும்.
எமது இந்த அரசியல் பயணத்தின் ஊடாக இன ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், இன நெருக்கடிக்கான தீர்வு அனைத்தையும் இணக்க அரசியல் மூலம் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் இயங்கிக்கொண்டி ருக்கின்றோம்.
இன, மத, மொழி பேதங்களை கடந்து நாமனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் பயணிக்க முடிந்தால் குறுகிய காலத்துக்குள் வெற்றி இலக்கை எம்மால் அடைய முடியும் என்பதை உங்கள் முன்னிலையில் உறுதியளிக்கின்றோம்.
தேசிய நல்லிணக்கத்துக்கும், சமாதா னத்தை ஏற்படுத்தவும் இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு ஜப்பானின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம். முக்கியமாக இலங்கையின் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பிரதேசங்களில் சமூக, பொருளாதார நிலையை கட்டியெழுப்பும் பொருட்டு உதவியளிக்கும் மாநாடொன்றை கூட்டுவதில் ஜப்பானிய அரசின் முழுமையான ஒத்துழைப்பினை நான் எதிர்பாக்கின்றேன் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமதுரையில் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply