ஐ.எஸ் தீவிரவாதிகளை எச்சரிக்க ஹெலிகாப்டர் மூலம் துண்டுபிரசுரங்கள் வினியோகம்

leafletsஐ.எஸ் தீவிரவாதிகளை எச்சரிக்கும் விதமாக சிரிய அரசு ஹெலிகாப்டர் மூலம் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தது. பைகளில் நிரப்பப்பட்ட பல ஆயிரம் பிரசுரங்கள் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு தீவிரவாதிகள் அதிகம் உள்ள ரஸ்தான் மற்றும் தைபிஷே பகுதியில் வீசப்பட்டன. இந்த ஹெலிகாப்டர் மெய்மிம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ரஷ்ய படைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதால், தீவிரவாதத்தை உடனடியாகக் கைவிடுமாறும், அந்த இடத்தைவிட்டு வெளியேறுமாறும் அந்த பிரசுரங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

இப்பகுதிகளில் ஏற்கனவே ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், மேலும் பல தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சிரிய அரசு தெரிவித்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply