விமல், தினேஷ், வாசு ஆகியோர் கட்சித்தலைவர்களா? இல்லையா?

tkn-09-02-rm-59-pgi-1_0தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரைக் கட்சித் தலைவர்களாக அங்கீகரிப்பதா? இல்லையா? என்ற தனது தீர்மானத்தை இந்த வாரம் அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

தங்களுக்கு கட்சித் தலைவர்களுக்குரிய அங்கீகாரம் வழங்கப்படாதது தொடர்பில் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி யெழுப்பினர்.

 

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கடந்தகால பாராளுமன்ற முன் மாதிரிகளையும் கட்சித் தலைவர்களது கருத்தையும் அறிந்து இது தொடர்பில் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply