ஆப்கான் மருத்துவமனை மீது தாக்குதல்: மன்னிப்பு கோரினார் அமெரிக்க அதிபர் ஒபாமா
ஆப்கானிஸ்தானில் வடக்கே குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 22 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையை சேர்ந்த விமானத்தால் நடத்தப்பட்டது. நேற்று குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட சம்பவம் என்று ஆப்கானுக்கான அமெரிக்க ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட மருத்துவமனையில் பணியாற்றி ’எல்லைகளற்ற மருத்துவர் குழு’ என்ற தொண்டு நிறுவனத்தின் இயக்குனரிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் தாக்குதலில் இறந்து போனவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர் வருங்காலத்தில் இது போன்ற சம்வவங்கள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply