நான் மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளேன் உணவு என்பது தனிமனித உரிமை: கமல்
கமல்-திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘தூங்காவனம்’ படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், திரையுலகை சேர்ந்த பல்வேறு கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். சென்னை சத்யம் திரையரங்கில் இந்த விழா நடைபெற்றது. தற்போது தேவையாற்ற வகையில் விவாத பொருளாக மாறியிருக்கும் மாட்டிறைச்சி சாப்பிடுவது பற்றி கமல் பேசும்போது ”முன்பு நான் மாட்டிறைச்சி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது சாப்பிடுவது இல்லை. மாட்டிறைச்சி சாப்பிடுவதும் சாப்பிடாததும் தனி மனித உரிமை” என்று தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிசடா என்னும் கிராமத்தில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதாக கடந்த திங்கட்கிழமை அக்லாப் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவை சேர்ந்த பிரபல கலைஞர்களும், எழுத்தாளர்காளும் தங்கள் கருத்துகளை பதிவு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply