சர்­வ­தேச விசா­ர­ணைக்கு போவ­தை­விட கலப்பு நீதி­மன்ற முறைமை சிறந்­தது

laxman_yapa_abeywardenasssசர்­வ­தேச விசா­ரணை என்ற நிலைக்கு போவ­தை­விட கலப்பு நீதி­மன்ற முறைமை சிறந்­த­தாகும். முழு­மை­யான சர்­வ­தேச தலை­ யீட்டை தவிர்த்து உள்­ளக விசா­ர­ணை­க­ளையும் வலி­யு­றுத்­தி­யுள்­ளமை வர­வேற்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னரும் பிரதி நிதி­ய­மைச்­ச­ரு­மான லக்ஷ்மன் யாப்பா அபே­வர்த்­தன தெரி­வித்தார். நாட்டில் நிரந்­தர அர­சியல் தீர்வை எட்­டு­வது தொடர்பில் பிர­தான இரண்டு கட்­சி­களும் அக்­க­றை­காட்டி வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கலப்பு நீதி­மன்ற முறை­மையை எதிர்க்கும் வகையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மஹிந்த தரப்பு செயற்­பட்டு வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­வுடன் யுத்த இழப்­புகள் தொட ர்பில் உண்­மை­யான விசா­ரணை ஒன்றை ஏற்­ப­டுத்த அனைத்து தரப்பும் வலி­யு­றுத்தி நின்­றன. குறிப்­பாக தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சிகள் மட்­டு­மல்­லாது சிவில் அமைப்­புகள், சர்­வ­தேச அமைப்­புகள் என பல தரப்­பினராலும் இந்த அழுத்தம் வழங்­கப்­பட்­டது.

எனினும் மஹிந்த ராஜபக்ஷ இந்த அழுத்­தங்­களை கவ­னத்தில் கொள்­ளாது தன்னை ஒரு தலை சிறந்த தலைவர் என நிரூ­பிக்கும் வகையில் பக்­கசார்­பான வகை­யி­லேயே செயற்­பட் டார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்குள் பக்­க­சார்­பாக நடந்து கொள்ளும் நபர்­க­ளுக்கு அப்­போது முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டதே தவிர நடு நிலை­யாக செயற்­பட்ட எம்மை புறக்­க­ணித்தே செயற்­பட்­டனர். ஆகவே நாம் முன்­வைக்க விரும்­பிய கருத்­துக்­களும் புறக்­க­ணிக்­கப்­பட்­டன என்­பதே உண்மை.

யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் மஹிந்­தவை புகழ்ந்­த­வர்கள் ஒரு கட்­டத்தில் இலங்­கையில் நடை­பெற்ற யுத்தம் தொடர்பில் மாற்றுக் கருத்­துக்கள் முன்­வைக்க ஆரம்­பித்­த­வுடன் இலங்­கையில் இன­வாத கருத்­துக்­களும் புலிக் கதை­க­ளுமே பல­ம­டைந்­தன. குறிப்­பாக இறுதி யுத்­தத்தில் நடந்­த­தாகக் கூறப்­படும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கும்­படி வலி­ யு­றுத்­தப்­பட்ட சந்­தர்ப்­பத்­திலும் சர்­வ­தே­சத் தின் உத­வி­யுடன் இலங்­கையில் நட­வ­டிக் ­கை­களை பலப்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்­தப்­பட்ட போதும் அர­சாங்கம் அவற்றை கவ­னத்தில் கொள்­ள­வில்லை. அன்று நாம் எதை யும் கவ­னத்தில் கொள்­ளாது தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­பட ஆரம்­பித்­தமை இன்று எமக்கு எதி­ராக மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதேபோல் சர்­வ­தேச தரப்­பிடம் நாம் கொடுத்த வாக்­கு­று­திகள், உள்­ளக பொறி­மு­றை­களை பலப்­ப­டுத்­து­வ­தாக கூறிய வாக்­ கு­று­திகள் என்­பன இறு­தி­வ­ரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இலங்கை இரா­ணுவம் எந்­த­வித மனித உரிமை மீறல்­க­ளையும் மேற் ­கொள்­ள­வில்லை என்­பது எமக்குத் தெரிந்­தாலும் அதை அனை­வரும் நம்­பு­வார்கள் என நினைக்க முடி­யாது. ஆகவே எமது தரப்பு நியா­யங்­களை உறு­திப்­ப­டுத்­தவும் எம்மை நிரூ­பிக்­கவும் ஏதா­வது ஒரு விசா­ர­ணை­யை மேற்­கொண்­டி­ருக்க வேண்டும். ஆரம்­பத்தில் நாம் எமது உள்­ளக பொறி­மு­றை­களை சிறி­த­ள­வேனும் முன்­னெ­டுத்­தி­ருந்தால் இன்று எமக்கு எமது இரா­ணு­வத்தை நிரூ­பிக்க அதி­க­ளவு சந்­தர்ப்­பங்கள் கிடைத்­தி­ருக்கும்.

அதேபோல் சர்­வ­தேச அழுத்தங்களை சமா­ளிக்­கக்­கூ­டி­ய­தா­கவும் இருந்­தி­ருக்கும். இலங்­கையில் ஒரு சர்­வ­தேச விசா­ரணை நடத்­தவோ அல்­லது கலப்பு நீதி­மன்ற முறைமை பலப்­ப­டுத்­தவோ தேவை ஏற்­பட்­டி­ருக்­காது. ஆனால் நேர­டி­யாக சர்­வ­தேச விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண் டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்து சர்­வ­தேச தரப்பு மாறி­யுள்­ளது. சர்­வ­தேச விசா­ரணை என்­பதை விடவும் கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணைகள் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய விட­ய­மாகும்.

இப்­போது புதிய ஆட்­சியில் நிலை­மைகள் முழு­மை­யாக மாற்றம் கண்­டுள்­ளன. ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் செயற்­பா­டுகள் நாட்டை சரி­யான முறையில் பாது­காக்­கின்­றது. இவர்­க­ளது செயற்­பா­டுகள் அனை­வ­ரது பாராட்­டையும் பெறக்­கூ­டிய வகையில் அமைந்­துள்ளது. இம்­முறை ஜெனி­வாவில் நடந்த சம்­ப­வங்கள் அவர்கள் மேற்­கொண்ட விதம் என்­ப­வற்றை அனை­வரும் அவ­தா­னித்­தார்கள். ஜன­வ­ரியில் நாட்டில் ஏற்­பட்ட மாற்றம் எம்­மையும் எமது நாட்­டையும் காப்­பாற்­றி­யுள்­ளது. ஜன­நா­யக ரீதியில் ஏற்­பட்ட மாற்­றங்கள் சர்­வ­தே­சத்தின் மீதான நம்­பிக்­கை­யையும் பலப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆகவே இப்­போது நாம் சர்­வ­தேச அழுத்­தங்­களைக் கண்டு அஞ்ச வேண்­டிய தேவையும் இல்லை.

மிக முக்­கி­ய­மாக அனை­வரும் எதிர்­பார்க்கும் கார­ணி­களில் சர்­வ­தேச விசா­ரணை என்ற பதம் இப்போது மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற் றும் இடம் பெயர்ந்த வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நீண்டகால சிக்கல் நிலைமை காணப்பட்டது. ஆனால் இப்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே எஞ்சி யிருக்கும் ஒரே பிரதான பிரச்சினையாக இரு ப்பது அரசியல் தீர்வு காண்பதேயாகும். அத ற்கான நடவடிக்கைகளை இரண்டு பிரதான கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. ஆகவே அனைத்து பிரச்சினைகளும் விரை வில் தீர்க்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply