நவீன ஆயுதங்களை சோதனை செய்வதற்காகவே சிரியா மீது ரஷ்யா தாக்குதல்: நேட்டோ குற்றச்சாட்டு
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், சிரியா போராளிகளுடன் சேர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர்.இதனையடுத்து, ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் இறங்கி வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது.
இதில் முக்கியமாக, அமெரிக்க கூட்டுப் படைகளுடன் சேராமல் ரஷ்யா தனியாக தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நவீன ஆயுதங்களை சோதனை செய்வதற்காகவே சிரியாவில் ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருவதாக, பன்னாட்டுப் படையான நேட்டோ குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க், “ரஷ்யாவின் ராணுவ படைகள் சிரியாவில் குவிக்கப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. இது நேட்டோவின் வான்வெளி தாக்குதல்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்” என்றார்
மேலும் துருக்கி வான்வெளி தளம் மீது ரஷ்யா விமானப்படை நடத்திய தாக்குதல் ஏற்றுக் கொள்ளத்தக்கல்ல என்று கூறிய அவர், நேட்டோ படைகள் நிலைமைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply