பூமியைப் போலவே நீல வானத்துடன் உள்ள மற்றொரு கிரகத்தின் புகைப்படத்தை நாசா வெளியிட்டது

SUNநாசாவின் ‘நியூ ஹாரிசோன் ஸ்பேஸ்கிராப்ட்’ பூமியிலிருந்து சுமார் 3.1 பில்லியன் மைல் தூரத்தில் தற்போது சீரான நிலையில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இது, அவ்வப்போது பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் இடைவெளியைக் காட்டிலும் 40 மடங்கு தூரத்தில் உள்ள புளூட்டோ முற்றிலுமாக உறைந்துபோய் உள்ளது. ஆங்காங்கே, ஆவியாகும் பனிக்கட்டிகளால் இது பரவியிருக்கின்றது.

நியூ ஹாரிசோன் ஸ்பேஸ்கிராப்ட் சமீபத்தில் அனுப்பிய படங்களை நாசா நேற்று வெளியிட்டது. பூமியின் நிலாவைக் காட்டிலும் சற்றே சிறிய அளவுள்ள, சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோளான புளூட்டோ, பூமியில் உள்ளதைப் போலவே நீல நிற வானத்துடன் இருப்பதாக இந்த புகைப்படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்களின் சிதறல், வளிமண்டலத்தில் உள்ள துகள்கள் மீது மோதும்போது வானம் நீலமாகத் தோன்றுவதால் புளூட்டோவின் வானம் நீலமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கிரகமான புளூட்டோவுக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த பதினோறு வயது சிறுமியால் இப்பெயர் சூட்டப்பட்டது. புளூட்டோவைச் சுற்றி ஐந்து நிலாக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply