தமிழ்நாட்டு பணிப்பெண் சவுதியில் கைவெட்டி சித்திரவதை

womenசவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலைசெய்து கொண்டிருந்த இந்தியப்பெண் ஒருவரின் கையை அவரை வேலைக்கு அமர்த்தியிருந்தவர் வெட்டிவிட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகளைக் கண்டு தாம் மிகவும் மன உளைச்சலை அடைந்திருப்பதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருக்கிறார். அந்த குறிப்பிட்ட பணிப்பெண் தன்னை வேலைக்கு அமர்த்தியிருந்த குடும்பம் தன்னை கொடுமை செய்வதாகவும் சித்திரவதை செய்ததாகவும் கூறி அந்த வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது அவரது வலதுகை வெட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சவுதி அதிகாரிகளிடம் தாம் பேசியதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் கஸ்தூரி முனிரத்னம் சென்னையைச் சேர்ந்தவர்.

இந்த சம்பவம் குறித்து சவுதி அரேபிய அதிகாரிகள் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

இந்தியாவில் இருந்த சவுதி அரேபிய ராஜதந்திரி ஒருவர் தன் வீட்டுப்பணிப்பெண்களை அடைத்துவைத்து தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்தார் என்கிற புகார்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட சௌதி அரேபிய ராஜதந்திரி அவசர அவசரமாக இந்தியாவை விட்டு வெளியேறிய சம்பவம் நடந்து ஒரு மாத காலத்தில் தற்போதைய இந்த புகார் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு செல்பவர்கள் பல்வேறுவகையான வன்முறைகளை எதிர்கொள்ள நேருவதாக மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்திருக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply