அகதிகளுக்கு எதிரான ஜேர்மனிய போராட்டங்கள்

germanyஇத்தாலியில் இருந்து சுவீடனுக்கு எரித்திரிய நாட்டு குடியேறிகள் இருபது பேரை அனுப்பியதுடன், ஐரோப்பாவின் குடியேறிகள் நெருக்கடியை கையாள்வதற்கான பெரிய முயற்சி ஆரம்பமாகியுள்ளது. புதிய இடமாற்ற திட்டத்தின் கீழ் முதன்முதலாக இன்னுமொரு இடத்தில் மீளக் குடியமர்த்தப்படும் குடியேறிகள் இவர்களாவர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடந்த மாதம் அங்கீகரித்ததுபோல, இத்தாலி மற்றும் கிரேக்கத்தில் இருந்து இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து இருபதினாயிரம் குடியேறிகள் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் பகிர்ந்துகொள்ளப்படுவார்கள்.

இந்த வருடத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான குடியேறிகள் ஐரோப்பாவுக்கு வந்துள்ளனர்.

இவர்களில் பலர், பொதுவாகவே அகதிகளை வரவேற்கும் ஜேர்மனிக்கு சென்றனர். ஆனால், அகதிகளின் வருகை அதிகரிப்பு, அங்கு தீவிர வலதுசாரி இயக்கங்களை கோபம் கொள்ளச் செய்திருக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply