ஜிம்பாப்வே யானையைக் கொல்ல ஆயிரக்கணக்கான டாலர் பணம் தந்த வேட்டைக்காரர்

elefaneஜிம்பாப்வேயின் மிகப்பெரிய யானைகளில் ஒன்றை சுட்டுக்கொல்ல, ஜெர்மன் வேட்டைக்காரர் ஒருவர் ஆயிரக்காணக்கான டாலர்கள் பணம் கொடுத்துள்ளார்.அறுபது வயதான இந்த யானை கம்பீரமான தோற்றமுடையது என்றும், தரையைத் தொடும் அளவுக்கு நீண்ட தந்தங்களைக் கொண்டது என்றும் நாட்டின் வனவிலங்கு பாதுகாப்புப் படையின் தலைவர், ஜானி ரோடரிகஸ் கூறினார். இந்த வேட்டை சட்டப்படிதான் நடக்கிறது என்றாலும், அது அறம் சார்ந்ததல்ல என்று அவர் குறைப்பட்டுக்கொண்டார்.

ஜிம்பாப்வேயின் மிகப் பிரபலமான ‘செசில்’ என்ற சிங்கத்தைக் கொன்ற அமெரிக்க வேட்டைக்காரர், அந்த வேட்டை சட்டபூர்வமானது என்பதால், வழக்கை எதிர்கொள்ளமாட்டார் என்று இந்த வாரம் முன்னதாக ஜிம்பாப்வே அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply