கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை: சித்தராமையா

a0e070be-9fe2-4860--0d9d06406831_S_secvpfஉலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 22-ந் தேதி மைசூருவுக்கு வந்தார். அங்கு தனது வீட்டில் தங்கியிருந்த சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த ஆண்டு விவசாயிகள் தற்கொலை சம்பவம், கடுமையான வறட்சி ஆகியவற்றால் ஆடம்பரம் இல்லாமல் சம்பிரதாயப்படியும், கலாசாரப்படியும் தசரா விழா கொண்டாடப்பட்டது. கர்நாடகத்தில் வறட்சி இல்லாமல் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தால், அதனை தமிழகத்திற்கு கொடுப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கர்நாடகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. இங்கு குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பிறகு எப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியும்.

 

மனிதாபிமான அடிப்படையிலேயே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் இனியும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. காவிரியில் இருந்து கர்நாடகம் கொடுக்க வேண்டிய 48 டி.எம்.சி. தண்ணீரை கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதனை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்.

 

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

 

தாவணகெரேயில் எழுத்தாளர் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே? என்று அவரிடம் கேட்டதற்கு, ‘‘எழுத்தாளரை தாக்கியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply