வங்கதேச குண்டுவெடிப்பு: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

04f1408a-cc5b-44e1-84c4-a4134e9d2bb7_S_secvpfவங்கதேசத்தில் மொகரம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, நேற்று ஷியா பிரிவினர் நடத்திய ஊர்வலத்தின் போது, தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒரு 12 வயது சிறுவன் துடிதுடித்து பலியானான். மேலும் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது வங்கதேச மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அண்மைக்காலமாகவே அங்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply