லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மீது நடவடிக்கை: ஒபாமாவிடம் நவாஸ் ஷெரீப் உறுதி
லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உறுதியளித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை இன்று சந்தித்து பேசினார். சுமார் 90 நிமிடங்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஐ.நா.வால் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்ட தனி நபர்களுக்கு எதிராகவும், பயங்கரவாத அமைப்புகள் என்று பிரகடனம் செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் அடிப்படையில் சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளின்படியும் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று அதிபர் ஒபாமாவிடம், பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்ததற்காக பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிபர் ஒபாமாவிற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply