பாகிஸ்தான் நடிகர்களின் நிகழ்ச்சியில் தகராறு செய்த சிவ சேனா

d1413e8d-3ded-4079-a056-774308b4e015_S_secvpfசிவசேனாவின் எதிர்ப்பை தொடர்ந்து பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியின் புத்தக வெளியீட்டுக்கும் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் விழாவை ரத்து செய்யமாட்டோம் என்று கூறியதால் பா.ஜ.க. தலைவர் சுதீந்திரா குல்கர்னி மீது கருப்பு மை வீசப்பட்டது. பிறகு மும்பையில் நடைபெற இருந்த இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை சிவசேனா போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசனை செய்த சிவசேனா தங்களது அடுத்த இலக்காக பாகிஸ்தான் நடிகர்களை குறிவைத்துள்ளது.

 

குர்கானில் நேற்று பாகிஸ்தானின் லாகூரில் உள்ள மாஸ் பவுண்டேஷனைச் சேர்ந்த கலைஞர்களின் நாடக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்த போது, திடீரென மேடை மீது ஏறிய சிவ சேனா கும்பல்  ‘பாரத் மாதா கி ஜே’  ‘பாகிஸ்தான் ஒழிக’ என்று கோஷமிட்டபடி நிகழ்ச்சியை நடத்த விடாமல் ரகளையில் ஈடுபட்டது. இதனால் அந்த நிகழ்ச்சி 5 முதல் 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதும் அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடியதாக கூறப்படுகிறது.

 

ஆனால், வழக்கத்திற்கு மாறாக சிவ சேனாவினர் மீது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அதற்கான காரணம் குறித்து கேட்ட போது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ரொஹில்லா,  “ போலீசில் புகார் கொடுத்து தொந்தரவு செய்பவர்களை ஹீரோக்களாக மாற்ற விரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்.

 

நிகழ்ச்சி குறித்து முன்பே தகவல் கொடுக்கப்பட்டும் ஒரு பொலீசார் கூட பாதுகாப்புக்கு வரவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பிரச்சனைக்கு காரணமான சிவ சேனாவின் தரப்பில் பேசிய அதன் தொண்டர் ரிதுராஜோ, “குர்கானில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply