மெக்சிகோவில் மணிக்கு 322 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பாட்ரிசியா சூறாவளி
மெக்சிகோவில், மணிக்கு 322 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பாட்ரிசியா சூறாவளி மற்றும் கனமழையால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் சூறாவளிக் காற்றினால், ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள ப்ளேயா பெருலா, ப்யூர்டோ வல்லார்டா ஆகிய இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மணிக்கு 322 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றினால், வீடுகளின் கூரை பறந்தன.
இந்த சூறைக்காற்றிற்கு பாட்ரீசியா என்று பெயரிடப்பட்டுள்ளது. ப்யூர்டோ வல்லார்டா அருகில் கொலிமா எரிமலைப்பகுதிக்கு அருகேயும், மழை பொழிவு அதிகளவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 15 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிலிப்பைன்சில் வீசிய ஹயான் புயலை விட பாட்ரிசியா மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வானிலைய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply