ஆங்கிலத்தில் பேச்சு: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

2015-10-25-02-24-28-1751667189ஆங்கிலத்தில் உரையாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.உருதுவை அதிகாரபூர்வமான மொழியாக அறிவிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஐ.நா.வில் அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அங்கு ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

 

உருதுவில் பேசாமல், ஆங்கிலத்தில் உரை நிகழ்த்திய அவரது செயல் நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறி, ஜாகித் கனி என்பவர், நவாஸ் ஷெரீப் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply