மீண்டும் ஈழ விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்களுக்கு அஞ்சும் இலங்கை

images-2இலங்கைக்கு இராணுவம் மற்றும் பாதுகாப்பு விடங்களில் உளவுத் தகவல்கள் வழங்கும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பெரும் பங்கு வகித்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் இலங்கை அரசுக்கு ஒர் எச்சரிக்கை இந்த நாடுகளால் விடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. அதாவது வெளிநாடுகளில் வாழும் ஈழ விடுதலைப் புலிகளால் இலங்கை மீது ஒரு விமானத் தாக்குதல்கள்; நடாத்தக் கூடிய வாய்பொன்று இருப்பதாகவும் அதற்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறும் கட்டளை இடப்பட்டுள்ளதாம். கடந்த மாதம் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா? என்ற தலைப்புக் கொண்ட ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தோம்.

 

புலிகள் எதிர்காலத்தில் இலங்கை மீது விமானச் சண்டையை விமானத் தாக்குதலை செய்யலாம் என்றும் இலங்கை எதிர்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தோம். அது கூட எங்காவது ஒரு நாட்டில் இருந்துதான் அந்த விமானத் தாக்குதலை செய்ய முடியுமேயொழிய, இலங்கைக்குள் இருந்து செய்ய முடியாது என்றும் சொல்லியிருந்தோம் என்பதை இங்கு ஞாபகமூட்டுகின்றோம்.

 

வெளிநாடுகளில் வாழும் புலிகள் மற்றும் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் புலம் பெயர் மக்களில் சிலருக்கு அரசு அஞ்சுகின்றது. காரணம் வெளிநாடு வாழ் புலிகள் ஆதரவு கொண்ட அணியொன்று இறுதி யுத்தத்தின் பின்னர் இஸ்ரவேலுடன் நெருங்கிச் செல்வதாகவும் எதிர்காலத்தில் ஏதாவது விமானத் தாக்குதலுக்கு இலங்கை எதிர் கொள்ளலாம் என்று அஞ்சுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply