கேரளாவில் பெண் குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய கணவன்–மனைவி கைது

policeகேரள மாநிலம் காயங்குளம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் ஆறும், கடலும் சேரும் அழிகால் புழை உள்ளது. இங்குள்ள ஆற்று தண்ணீரில் பிறந்து 6 மாதமான பச்சிளங் பெண் குழந்தை பிணம் ஒன்று மிதந்தது. ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் சிலர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் குழந்தை பிணம் மிதப்பது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் அங்கு சென்று அந்த குழந்தையின் பிணத்தை மீட்டனர். அந்த குழந்தை பார்ப்பதற்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தது போல இருந்ததால் அந்த பகுதியில் தங்கி உள்ள வெளி மாநிலத்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.அப்போது அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாசுதேவ் (வயது 45), அவரது மனைவி பிரதீபா (30) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அந்த குழந்தை அவர்களதுதான் என்பது தெரிய வந்தது.

வாசுதேவ் தனது முதல் மனைவியையும், பிரதீபா தனது முதல் கணவரையும் ஏற்கனவே விவாகரத்து செய்து விட்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி உள்ளனர்.வாசுதேவுக்கு முதல் மனைவி மூலம் ஏற்கனவே 2 குழந்தைகள் உண்டு. பிரதீபாவுக்கு முதல் கணவர் மூலம் குழந்தைகள் கிடையாது. இந்த நிலையில் வாசுதேவ் மூலம் பிரதீபாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.இது வாசுதேவுக்கு பிடிக்கவில்லை. பெண் குழந்தை என்பதால் அதை அவர் வெறுத்தார். மேலும் அவரும், பிரதீபாவும் சேர்ந்து குழந்தை என்றும் பாராமல் அதை சித்ரவதை செய்து கொன்று உள்ளனர்.பிறகு குழந்தையின் பிணத்தை பொழிமுகத்தில் வீசி உள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply