மஹிந்தவுக்கு துப்பு வழங்கும் FCID உயர் அதிகாரி குறித்த தகவல் கசிவு
நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு நாளாந்தம் விசாரணைக்கு அழைக்கப்படுபவர்கள் தொடர்பான தகவல்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியதாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.பொலிஸ் திணைக்களத்திலுள்ள இந்த உயர் தரத்திலுள்ள அதிகாரி வாஸ் குணவர்தனவை கைது செய்து விசாரணை செய்தபின்னர் அவரை விடுதலை செய்யுமாறு எப்.சி.டி.ஐ. யிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எப்.சி.டி.ஐ. பிரிவை கலைக்குமாறு கூறி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தபோது அக்கட்சி உறுப்பினர்களுக்கு குறித்த பொலிஸ் அதிகாரி வெளிப்படையாக ஆதரவு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply