கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்தது கடற்புலிகளின் முக்கிய தளபதி பலி
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்து கடும் தாக்குதல் நடத்துகிறது. கிளிநொச்சியில் 90 சதவீதம் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக ராணுவம் அறிவித்து உள்ளது.
இந்த கடும் சண்டையில் விடுதலைப்புலிகளின் கடற்படையைச் சேர்ந்த முக்கிய தளபதி ஒருவர் பலியானார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை பிடிக்க ராணுவம் நாலாபுறமும் சுற்றி வளைத்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
ராணுவத்தின் `அதிரடிப்படை 1′ என்ற பிரிவைச் சேர்ந்த வீரர்கள் கிளிநொச்சியின் மேற்குப் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்தச் சண்டையில் மிக முக்கிய கட்டத்தை அடைந்து விட்டதாகவும், கிட்டத்தட்ட கிளிநொச்சியின் 90 சதவீதம் பகுதியை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. அதாவது 80 கி.மீட்டர் நீளமுள்ள வடமேற்கு கடற்பகுதியான கிளிநொச்சியில் 70 கி.மீட்டர் தூரத்தை இலங்கை படையினர் தங்கள் வசம் கொண்டு வந்து, அந்தப் பகுதி முழுவதையும் `சீல்’ வைத்து விட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply