லண்டன் மீது சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை போட திட்டமிட்ட ரஷ்யா

AKTOMஇங்கிலாந்தை சேர்ந்த மறைந்த அணு வல்லுனர் ஒருவரின் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பனிப்போர் காலத்தில் லண்டன் மீது சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை போட ரஷ்யா திட்டமிட்டது தெரியவந்துள்ளது. அந்நாட்டின் தேசிய ஆவணகாப்பகம், பென்னி வில்லியம் என்ற அணு வல்லுநர் இங்கிலாந்தின் அணுசக்தி துறைத் தலைவருக்கு தன்கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையை வெளியிட்டுள்ளது. அந்த கடித்தில் 1954-ம் ஆண்டு சக்தி வாய்ந்த 4 அல்லது 5 அணு குண்டுகளை லண்டன் நகரத்தின் முக்கிய பகுதிகள் மீது போட ரஷ்யா திட்டடுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு குண்டும் 3 மைல் சுற்றளவை அடியோடு அழிக்கும் வல்லமை பெற்றது என்றும், ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அணு குண்டுகளை விட அவை சக்தி வாய்ந்தது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply