கடன் சுமையை தாங்கிக்கொள்ள முடியாத தந்தை உட்பட 5 பேருடன் தற்கொலை
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லில்லி என்ற நகரிலிருந்து சுமார் 7 கிலோ மீற்றர் தொலைவில் குடியிருப்பு பகுதி ஒன்று அமைந்துள்ளது.இந்நிலையில், இங்குள்ள வீட்டிலிருந்து பொலிசாருக்கு கடந்த புதன் கிழமை அவசர தகவல் ஒன்று கிடைத்துள்ளது.அத்தகவலை பெற்ற பொலிசார், சந்தேகத்திற்குரிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.வீட்டிற்குள் ஒரு படுக்கை அறையில், 6 மாத ஆண் குழந்தை, 4 வயது ஆண் மற்றும் 10 வயது பெண் குழந்தைகள் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளதை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், குழந்தைகளுக்கு அருகில் அவரது தாயாரும்(40) சடலமாக கிடந்துள்ளார். இரண்டு அடுக்கு மாடிகள் கொண்ட அந்த வீட்டின் மற்றொரு அறையை சோதனை செய்தபோது, அங்கு தந்தை(42) தூக்கில் தொங்கியவாறு இறந்துள்ளார். இச் சம்பவம் குறித்து Frederic Fevre என்ற விசாரணை அதிகாரி கூறியபோது :தந்தை இறப்பதற்கு முன்னர் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.அக்டோபர் 16ம் திகதி எழுதப்பட்ட அந்த கடிதத்தில், ‘பல வருடங்களாக கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி பெரும் அவதிப்பட்டு வந்துள்ளோம்.
எதிர்காலத்தில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கூட கடன் சுமையால் வேதனை அடையக்கூடாது என்ற ஒரே எண்ணத்தால் இந்த சோகமான முடிவை எடுத்துள்ளதாக’ அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.இச் சம்பவம் குறித்து அருகில் குடியிருந்தவர்கள் கூறுகையில்,ஒரு ஆண்டிற்கு முன்னர் தான் இறந்தவர்களின் குடும்பம் இங்கு குடியேறியது.விளையாட்டு மைதானத்தில் இறந்த குழந்தைகள் உற்சாகமாக விளையாடுவதை கண்டு ரசித்துள்ளோம்.
ஆனால், இன்று அவர்களின் இறப்பு இந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.என தெரிவித்தனர்.இந்நிலையில், 5 சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர்.இச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply