உ.பி.யில் பயங்கரம்: பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கணவர் சுட்டுக்கொலை

gun fireவன்முறை வெறியாட்டங்களின் தலைநகராக விளங்கிவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளரின் கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நகரப் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இம்மாதம் 9,13,17,29 தேதிகளில் நான்கு கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றது. அசாம்கர் மாவட்டத்தில் இறுதிக்கட்டமாக வரும் 29-ம் தேதி நடைபெறும் வட்டார மேம்பாட்டு குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தனது மனைவிக்காக பிரச்சாரம் செய்துவிட்டு, சாஹப் லால் ராம் என்பவர் நேற்றிரவு டியோகான் பகுதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரை வழிமறித்த சிலர், துப்பாக்கிகளால் சுட்டனர். குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்த சாஹப் லால் ராம், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தேர்தல் முன்விரோதம் தொடர்பாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து, குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply