கனடாவில் கடலில் சுற்றுலா படகு மூழ்கி 4 பேர் பலி
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வான் கோவர் தீவு உள்ளது. சுற்றுலா தளமான அங்கு கடலில் அதிக அளவில் திமிங்கிலங்கள் உள்ளன. அவற்றை பார்க்க ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.இவர்கள் கடலில் படகுகளில் பயணம் செய்து அவற்றை பார்த்து ரசிக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை கனடா அரசு செய்துள்ளது.நேற்று ஒரு படகு சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நடுக்கடலக்கு சென்றது. டோபினோ அருகே சென்ற போது அப்படகு திடீரென கடலில் மூழ்கியது.
தகவலறிந்ததும் கடலோர பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்த சென்றனர். அதற்குள் படகில் இருந்த 4 பேர் கடலில் முழ்கி பலியாகினர்.
மூழ்கிய படகில், 27 பேர் பயணம் செய்தனர். அவர்களில் பலியானவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. மேலும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இருந்தாலும் மோசமான வானிலையே காரணம் என்று கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply