இந்தோனேசியாவில் காட்டுத்தீ: பிலிப்பைன்ஸ் நாட்டில் விமானங்கள் ரத்து
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. கடந்த 10 நாட்களாக எரிந்து வரும் இந்த தீயினால் அங்கு கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இருந்தும் காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.தீயை அணைக்கும் பணியில் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உதவி வருகின்றன. இந்த புகைமூட்டத்தால் தென் கிழக்கு ஆசிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தன.
இந்த நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் நாடும் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்சில் புகை மூட்டத்தால் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் முகமூடி அணியும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர். மூச்சுதிணறலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சிபு நகர பகுதியில் புகைமூட்டம் அதிகமாக உள்ளது. எனவே மத்திய மற்றும் தென்பகுதி தீவுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் வீசிய கோப்பு புயலால் பிலிப்பைன்ஸ் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply