பாகிஸ்தான் – இந்திய ராணுவம் இடையிலான சண்டையில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவம் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் மீடியா தகவல் வெளியாகிஉள்ளது.ஜம்மு – காஷ்மீர் மாநில எல்லையோர பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ நிலைகள் மீதும், எல்லையோர கிராமங்கள் மீதும் குறி வைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது. கடந்த ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றுமுன்தினம் பகலில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர்.
சில வாகனங்களும் சேதம் அடைந்தன. நேற்று இரவும் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது. இதில் கிராம மக்கள் 7-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. எல்லையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதற்கிடையே இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்ட பதிலடியில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தானின் டி.சி.ஒ. தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று அந்நாட்டு மீடியா தகவல் வெளியிட்டு உள்ளது.
ஷியால்கோட்டில் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 16 வயது சிறுமியும், 10 வயது சிறுவனும் உயிரிழந்ததாக டான் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்திய ராணுவ தாக்குதலில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது 14 ஆக உயர்ந்து உள்ளது என்றும் 59 கால்நடைகள் காயம் அடைந்து உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply