தலித்களுக்கு ஆதரவான கட்சி பாஜக: தமிழிசை சவுந்தரராஜன்
தலித்களுக்கு ஆதரவான கட்சி பாஜக என அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றுத்துக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி பாடுபட்டு வருகிறார். ஆனால், நாட்டில் நடந்து வரும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு எந்த மாநிலத்தில் எது நடந்தாலும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் மோடி மீது குற்றம்சாட்டுகின்றனர். தலித்களுக்கு எதிராக மோடி அரசு செயல்படுவதாக திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
பாஜகவில் 45 எம்.பி.க்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தலித்கள் 4 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தலித்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் பல முக்கியப் பொறுப்புகளில் தலித் சமூகத்தினர் உள்ளனர்.
தலித்கள் தொழில் துறையில் சாதிப்பதற்காக புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. லண்டன், டெல்லி, மத்தியப்பிரதேசம் என அம்பேத்கர் வாழ்ந்த இடங்கள் நினைவில்லங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு மாட்டிறைச்சி அரசியலை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் இரட்டை நிலையை தலித்கள் புரிந்து கொள்வார்கள். பாஜகவை தொடர்ந்து ஆதரிப்பார்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply