பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 311 ஆக உயர்வு

pksபாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 311 ஆக உயர்ந்துள்ளது.ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் நேற்று மாலை 2.20 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.5 ஆக பதிவானது. இதனால் அங்குள்ள பதாக்ஷன் மாகாணம் மோசமாக பாதிக்கப்பட்டது.இது பாகிஸ்தான் தஷிகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் உள்ளது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 45 வினாடிகள் பூமி குலுங்கியது. வட ஆப்கானிஸ்தானில் தகார் மாகாணத்தில் உள்ள தலுகான் நகரில் நிலநடுக்கத்தின் போது கட்டிடம் அதிர்ந்தது. அப்போது அங்கு பாடம் படித்து கொண்டிருந்த மாணவிகள் பயத்தில் வெளியேறி ஓட்டம் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

அது தவிர நங்கார்கர், குனார், நுரிஸ்தான் மாகாணங்களிலும் உயிர்தேசம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மட்டும் நிலநடுக்கத்தில் சிக்கி 74 பேர் பலியாகி உள்ளனர். 264 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டியுள்ள மாகாணங்கள் பெரும் பாதிப்பு ஆளாகியுள்ளன. அங்கு சிட்ரால், சுவாத், சங்லா, திர்புனா மாவட்டங்களிலும் பல கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன.

இஸ்லாமாபாத் லாகூர், பெஹலர், கராச்சி ராவல் பிளை, குவெட்டா, மலா கண்ட், மகாரெட் ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தானில் மட்டும் 237 பேர் உயிரிழந்துள்ளனர். 1000–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply