பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கில் 5–ந்தேதி தீர்ப்பு

modiபாராளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலின்போது, பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, தேர்தல் சின்னத்தை காட்டியதாக புகார் எழுந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, தேர்தல் சின்னத்தை அவர் காட்டியது, நடத்தை விதிகளை மீறிய செயல் என குற்றம்சாட்டப்பட்டது.

 

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் மோடி குற்றமற்றவர் என போலீஸ் கூறியது. இதையடுத்து ஆமதாபாத் தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நிஷாந்த் வர்மா வழக்கு தொடுத்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் குஜராத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி கே.பி. பார்திவாலா விசாரித்தார். விசாரணை முடிந்துள்ள நிலையில், இந்த வழக்கில் வரும் 5–ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply