தி.மு.க.–அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரமாட்டோம்: திருமாவளவன் அறிவிப்பு

thirumaவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரிடம் நிருபர்கள் கேட்டகேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–கேள்வி: பா.ம.க. முதல்–மந்திரி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் கூறியுள்ள பேட்டியில் நாங்கள் தலித்துக்கள் சம்மந்தப்படும் கலப்பு திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார். எனவே விடுதலை சிறுத்தைகள் மீண்டும் பா.ம.க.வுடன் உறவு ஏற்படுத்திகொள்ளும் வாய்ப்பு உள்ளதா?பதில்: கலப்பு திருமணத்தை ஆதரிப்பதாக அன்புமணி ராமதாஸ் இப்போது கூறுகிறார். 

 

ஆனால் அவருடைய கட்சி தலித்துகளுக்கு எதிராக மோசமான அரசியலை செய்கிறது. அவர்கள் ஜாதி ரீதியான அரசியலை கையில் எடுத்து தலித்துகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.அன்புமணியும், அவரது தந்தை டாக்டர் ராமதாசும் பல நேரங்களில் வெவ்வேறு ராகங்களில் பாடுகிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக அவர்கள் ஜாதி ஓட்டை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசியலில் தலித்துகளுக்கு எதிராக நடந்து கொள்வது புதிதானது அல்ல.பா.ம.க. தொடர்ந்து தலித்துகளுக்கு எதிராக நடவடிக்கைகளை கையில் எடுத்து வருகிறது. தர்மபுரியில் அவர்கள் வெற்றிபெற்றபோது தலித்துகளால் அல்லாத ஓட்டுகளால்தான் வெற்றிபெற்றோம் என்றார்கள். அவர்களுடன் விடுதலை சிறுத்தைகளோ, அல்லது எங்களது மக்கள் நல கூட்டு இயக்கமோ கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம்.கேள்வி: தலித் விவகாரத்தை பொறுத்தவரை பா.ம.க.வைவிட திராவிட கட்சிகள் சிறப்பாக செயல்படுவதாக கருதுகிறீர்களா?பதில்: இதில் ஒன்றை வெளிப்படையாக சொல்லியாக வேண்டும். திராவிட கட்சிகளை இந்த விஷயத்தில் பெரிதாக எதுவும் குற்றம் சொல்வதற்கு இல்லை. ஆனால் கூட்டணி கட்சிகளிடம் அவர்கள் நடந்து கொள்வது வேறு மாதிரி இருக்கிறது.உதாரனமாக தி.மு.க.வுடன் 12 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்தோம். அவர்களுடன் விசுவாசத்துடன் இருந்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எப்போது இடைதேர்தல் வந்தாலும் அது பென்னாகரமாக இருக்கலாம், ஆர்.கே.நகராக இருக்கலாம். அவர்கள் எங்களை அழைத்து பேசாமல் புறக்கணித்தனர். தர்மபுரி விஷயத்தில் (திவ்யா–இளவரசன் சம்பவம்) பா.ம.க. எங்களை கடுமையாக விமர்சித்தது. அப்போது தி.மு.க. அதை கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமல்ல தலித் என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இதுவரை தி.மு.க. தனது கருத்தை சொல்லவில்லை. திராவிட கட்சிகள் இதில் ஒதுங்கியே இருந்தன.மனிதாபிமான அடிப்படையில் கூட அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. என்னை தாக்குவதற்கு முயற்சி நடந்தபோதும் அதுபற்றி எதிராக எதுவும் பேசவில்லை.திராவிட கட்சிகளை பொருத்தவரை சமூக ரீதிபற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் கட்சியில் கூட தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை. தி.மு.க.விலும், அ.தி.மு.க.விலும் மாவட்ட செயலாளர் பதவி கூட அவர்களுக்கு வழங்கவில்லை. தர்மபுரியில் தலித் மக்கள் வீடுகளை பா.ம.க. மட்டும் தாக்கவில்லை. மற்ற கட்சியினரும் அதில் சம்மந்தப்பட்டிருந்தார்கள்.கேள்வி: தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டும் என்று சொல்வதற்கான காரணம் என்ன?பதில்: கடந்த 47 ஆண்டுகளாக இங்கு காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள்தான் ஆட்சியில் உள்ளன. ஜனநாயகபடி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும். குறைந்த அளவில் உள்ள சமூகமான தலித்துகள், பழங்குடிமக்கள், சிறுபான்மை மக்கள், பெண்கள் என அனைவருக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால்தான் எங்களுடைய மக்கள்நல கூட்டு இயக்கம் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.கேள்வி: சட்டசபை தேர்தலை சந்திக்க மக்கள் நல கூட்டு இயக்கம் என்ன நடவடிக்கையில் இறங்கபோகிறது?பதில்: நாங்கள் ஒரு கூட்டு இயக்கத்தை நடத்தி வருகிறோம். இதுவரை கூட்டணி பற்றி முடிவு எடுக்கவில்லை. இது சம்மந்தமாக இனிமேல்தான் பேசி முடிவு எடுப்போம். நாங்கள் ஒருமித்த கருத்தோடு பயணத்தை செய்து வருகிறோம். அதே நேரத்தில் நாங்கள் தி.மு.க., அ.தி.மு.க., பாரதியஜனதா, காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளை பயன்படுத்திவிட்டு தூக்கி எரிவதை வழக்கமாக கொண்டுள்ளன. பெரிய சகோதரன் மனப்பாண்மையில் அவர்கள் செயல்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அவர்கள் சில இடங்களை கொடுத்து விட்டு எங்களுடைய வளர்ச்சியை தடுக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply