நேபாளத்தின் புதிய அதிபராக முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு

  1. nepal_7நேபாள வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் அதிபராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த நேபாள மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் வித்யா பன்டாரி அந்நாட்டின் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த பிறகு அந்நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒளி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நேபாளத்தின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இதில் பிரதமர் சர்மா ஒளி தலைமையில் இயங்கும் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் வித்யா பன்டாரி, குல்பகதூர் குரூங்கும் போட்டியிட்டனர். இதில் வித்யா தேவி பண்டாரிக்கு 327 வாக்குகளும், குல் பகதூர் குரூங்கிற்கு 214 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து  வித்யா பன்டாரி நேபாளத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அன்சாரி கர்தி அறிவித்தார்.

 

யார் இந்த வித்யா பன்டாரி

 

ஒருங்கிணைந்த நேபாள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து கார் விபத்தில் பலியான மதன் பண்டாரியின் மனைவி வித்யா பன்டாரி. தனது கணவரின் மறைவுக்கு பின்னர் அரசியலில் களம் இறங்கிய  அவர் நேபாளத்தில் பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.  பெண்களின் உரிமைகளை வலியுறுத்தும் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்ட வித்யா பன்டாரி நேபாளத்தின் ராணுவ அமைச்சராகவும் பணியாற்றினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply