கிரீஸ் நாட்டில் படகுகள் கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி-242 பேர் மீட்பு
கிரீஸ் நாட்டின் கிழக்கு ஏஜியன் கடலில், புலம்பெயர்ந்து வந்தவர்களின் படகுகள் விபத்தில் சிக்கியதில் 11 பேர் இறந்துள்ளனர். நேற்று மிகப்பெரிய படகு கவிழ்ந்ததையடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்ட கிரீஸ் கடலோர காவல் படையினர் 242 பேரை மீட்டுள்ளனர். அந்த படகில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் தெளிவாக தெரியவில்லை என கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் அலை அதிகமுள்ள கடலில் இருந்து தப்பி பிழைத்தவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படை படகுகள், ஹெலிகாப்டர் ஒன்று மற்றும் ஐரோப்பிய எல்லைப்பகுதி பிரன்டெக்ஸ் அமைப்பு ஆகியவை ஈடுபட்டன.
இந்த விபத்தில் 2 இளம் சிறுவர்கள் மற்றும் ஒரு நபர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என இன்னும் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், புதன்கிழமை சென்ற அந்த படகில் 200 பேர் இருந்தனர் என்றும் சிலர் 300 பேர் என்றும் தகவல் கூறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களை துருக்கி முக்கிய நில பகுதியில் இருந்து சில மைல்கள் தொலைவிலுள்ள லெஸ்போஸ் நகரில் உள்ள துறைமுக கிராம பகுதியான மாலிவோஸ் என்ற இடத்திற்கு, மீன் பிடி படகுகள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் கொண்டு சென்று சேர்த்தன.
அங்கு கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு, தன்னார்வ உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள் உதவிகளை செய்தனர். பெண்களில் பலர் அதிர்ச்சி அல்லது உடல் வெப்பநிலை குறைவு நோயால் பாதிப்படைந்து துறைமுக பகுதியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். துருக்கியில் நிலவும் குளிர் கால சூழலினால் தட்பவெப்ப நிலை மோசமடைந்து உள்ளதை அடுத்து கிரீஸ் தீவு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் சிறு படகுகளில் தொடர்ந்து புலம் பெயர்ந்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply