ஜிம்பாப்வேயில் மேலும் 23 யானைகளுக்கு விஷம் வைப்பு: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு
ஜிம்பாப்வே நாட்டில் விலங்குகள் சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு அந்நாட்டு வனவிலங்கு அதிகாரிகள் சிலரே உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில், தற்போது மேலும் 23 யானைகள் தந்தத்திற்காக விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருப்பதாகவும், கடந்த 2 மாதங்களில் இப்படிக் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஜிம்பாப்வே தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு நிர்வாக ஆணையத்தின் தலைவர் ஆல்வின் தெரிவித்துள்ளார்.
யானைகள் சிறுநீர் கழிக்கும் துளையில் இது போன்று சயனைடை வைத்து, கடந்த வருடம் 300 க்கும் மேற்பட்ட யானைகள் ஜிம்பாப்வேயில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply