எஸ்.எப். லொக்காவுக்கு நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை

stopஅனுராதபுர இரவு விடுதியின் உரிமையாளர் வசந்த சொய்சா கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற எஸ்.எப். லொக்கா என அழைக்கப்படும் முக்கிய நபரான ஆர்.ஏ. இரோனின் வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்யுமாறு குடிவரவு குடியல்வுத் திணைக்களத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுராதபுர மேலதிக மாவட்ட நீதவான் சானக கலங்சூரிய இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாகவே வேறு எந்த விமான நிலையத்தினுாடாகவே நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காகவே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply