சிரியா யுத்தத்தை நிறுத்தும் நோக்கிலான பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் ஆரம்பம்
சிரியாவில் யுத்தத்தில் ஈடுபட்டுவரும் வெவ்வேறு தரப்பினரின் வெளிநாட்டு ஆதரவாளர்கள் அனைவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் ஆரம்பித்துள்ளன. சிரியா தொடர்பான சர்வதேச ராஜீய முயற்சி ஒன்றில் இம்முறை முதல் தடவையாக இரானும் பங்கேற்றுள்ளது. சிரியாவின் அதிபர் அஸ்ஸத்தின் எதிர்காலம் பற்றிய கேள்வியில் ரஷ்யா மற்றும் இரானின் நிலைபாட்டோடு அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியாவின் நிலைப்பாடு முரண்பட்டிருக்கவே செய்தது.
ஆனால் குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு பஷர் அல் அஸ்ஸத்தை பதவியில் தொடர அனுமதிக்கும் வகையிலான இடைக்கால திட்டம் ஒன்றை எட்டுவதற்கு அருகில் இவர்கள் அனைவரும் தற்போது நெருங்கி வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
போர்நிறுத்தத்தைக் கொண்டுவருவது, பொதுமன்னிப்பு வழங்குவது, தேர்தல்களுக்கு வழிவகுக்கும் நடைமுறை வருவதை உறுதிசெய்வது உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டுவருவதாய் அறியக்கிடைப்பதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply