வன்னியில் புதிய களமுனையைத் திறந்தது இராணுவம்

வன்னியின் தெற்குப் பகுதியில் புதிய களமுனையொன்றை இராணுவம் திறந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நவம்பர் 3ஆம் திகதி திறக்கப்பட்டிருக்கும் இந்தக் களமுனைக்கு விசேட குழு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கதாகவும், இக்குழு ஏ௯ வீதியின் மேற்குப் பகுதியை இந்தக் குழு மீட்குமெனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மாங்குளம் மேற்கு மற்றும்  வன்னியின் தென்மேற்குப் பகுதிகளில் இந்தப் புதிய படை தமது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக 7 களமுனைகள் திறக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
“இந்த விசேட படைப்பிரிவு வவுனிக்குளம் பகுதியில் முதன் முதலில் விடுதலைப் புலிகளுடன் தாக்குதலை ஆரம்பித்தது” என பாதுகாப்பு அமைச்சு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இதனைவிட வன்னி முன்னரங்கப் பகுதியில் விசேட படையணி ஐ, 57வது படைப்பிரிவு மற்றும் விசேட படையணி  ஆகியன விடுதலைப் புலிகளுடன் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன.

59வது படைப்பிரிவு மணலாறு பகுதியிலிருந்து வடபகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும், 53வது படைப்பிரிவு முகமாலையிலிருந்து வன்னி முன்னரங்கப் பகுதிகளைப் பாதுகாத்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு செளியிட்டிருக்கும் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply