மாலத்தீவு அதிபரை கொல்ல சதி: தூதரக மூத்த அதிகாரி உள்பட 5 பேர் மலேசியாவில் கைது

malasian policeமாலத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் சென்ற படகை வெடிகுண்டு வைத்து தகர்த்து அவரை கொல்ல உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் துணை அதிபர் அஹமத் அடிப் இன்று கைது செய்ப்பட்டார். சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா நகரங்களுக்கு சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் தனது மனைவியுடன் கடந்த மாதம் நாடு திரும்பியபோ படகு விபத்தில் சிக்கினார். விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்த அவர், டெல்லியில் இருந்து கடந்த மாதம் 28-ம் தேதி காலை அதிவேக படகின் மூலம் மாலத்தீவுக்கு சென்றபோது, அவரது படகு திடீரென்று கடலில் வெடித்து சிதறியது.

இதில் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவ்விபத்தில் காயமடைந்த அதிபரின் மனைவி பாத்திமா இப்ராஹிம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் மற்றொரு படகுமூலம் பத்திரமாக மாலத்தீவு தலைநகரான மாலே சென்றடைந்தார்.

அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூமை கொல்ல சதி நடந்ததாகவும், அதில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டதாகவும் அந்நாட்டு உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் ரகசியமாக விசாரித்து வந்தனர். இந்த சதியில் மாலத்தீவு துணை அதிபர் அஹமத் அடிப்-புக்கும் தொடர்பு இருந்ததாக செய்தி வெளியான நிலையில், இதுபற்ற தீவிர விசாரணை நடத்திய போலீசார், துணை அதிபரை கடந்த வாரம் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த கொலை முயற்சி தொடர்பாக மாலத்தீவு தூதரக மூத்த அதிகாரி மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த 4 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவின் தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட தூதரக அதிகாரியான 47 வயது நபர், மாலத்தீவு நாட்டின் முதலீட்டு ஆலோசகராக பணியாற்றியதாகவும், மாலத்தீவு அதிபர் சென்ற படகில் வெடிகுண்டு வைத்ததில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

குடியுரிமைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 5 பேரும் விசாரணைக்காக மாலத்தீவுக்கு இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply